¡ஓ கடவுளே! உம்மை நான் ஆராதிக்கிறேன். என்னையே உமக்கு அர்ப்பணிக்கிறேன். நீர் விரும்பும் உம் பிள்ளையாக நான் இன்று இருப்பேனாக. உம் விருப்பம் என் வாழ்வில் இன்று நிறைவேறுவதாக.
தந்தை. சொலானுஸ் கேசி அவர்களுக்கு நீர் அளித்த கொடைகளுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். உமக்கு விருப்பமானால், தந்தை. சொலானுஸ் கேசியை 'புனிதர்' நிலைக்கு உயர்த்தி எங்களை ஆசீர்வதியும். ¡அதனால் பிறரும் அவரைப் பின்பற்றி, ஏழைகள் மீதும் துன்புறுவோர் மீதும் அவர் கொண்டிருந்த அன்பை தங்கள் வாழ்விலும் பிரதிபலிப்பார்களாக!
தந்தை. சொலானுஸ் கேசி, உமது தெய்வீக திட்டங்களை மகிழ்வுடன் ஏற்றதுபோல், இந்த என் மன்றாட்டுக்கள்...(உங்கள் மன்றாட்டை மெளனமாக செபிக்கவும்)... உம் திருவுளத்திற்கு ஏற்றவையானால், அவற்றை கனிவுடன் அருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறேன். ¡ஆமென்!
"உம் திட்டங்களிலெல்லாம் கடவுளே நீர் போற்றப் பெறுவீராக!"
அச்சிடலாம்: மேதகு. ஆலன் விக்னரன்
டெட்ராய்ட் உயர் மறை மாவட்டப் பேராயர்
மே மாதம் 2017